புதன், 11 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 3 செப்டம்பர் 2024 (08:13 IST)

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை.. ஆர்ஜி கர் மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் கைது..!

கொல்கத்தாவில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்த சம்பவம் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் இந்த வழக்கில் இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கொலை நடந்த கொல்கத்தா ஆர்ஜி கர் மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சந்திப் போஸ் என்பவர் அதிரடியாக கைது செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

ஆர்ஜி கர் மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சந்திப் கோஷ் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக எழுந்த புகாரால் சிபிஐ போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அடையாளம் தெரியாத மற்றும் உரிமை போராட்ட பிணங்களை சட்டவிரோதமாக விற்பனை செய்தது, பயோ மெடிக்கல் கழிவுகளை கடத்தியது, தேர்ச்சி பெற வைக்க மாணவர்களிடம் லஞ்சம் வாங்கியது என சந்திப் கோஷ் மீது அடுக்கடுக்கான புகார்கள் குவிந்த நிலையில் தற்போது அவர் சிபிஐ போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சிபிஐ அதிகாரிகள் அவரிடம் தீவிர விசாரணை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளன.

Edited by Siva