திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 9 செப்டம்பர் 2024 (07:20 IST)

யூடியூப் பார்த்து அறுவை சிகிச்சை செய்த போலி மருத்துவர்.. 15 வயது சிறுவன் பரிதாப பலி..!

யூடியூப் பார்த்து அறுவை சிகிச்சை செய்த போலி மருத்துவர் காரணமாக 15 வயது சிறுவன் பரிதாபமாக பலியான நிலையில் போலி மருத்துவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 15 வயது சிறுவனுக்கு பித்தப்பை கல் பிரச்சனை இருந்த நிலையில் அந்த கல்லை அகற்றுவது எப்படி என யூடியூப் பார்த்து போலி மருத்துவர் ஒருவர் அறுவை சிகிச்சை செய்துள்ளார். இந்த அறுவை சிகிச்சை தவறாக செய்ததால் சிறுவன் பரிதாபமாக பலியானதாக தெரிகிறது.

இந்த நிலையில் சிறுவன் உயிரிழந்ததை அடுத்து போலி மருத்துவர் தலைமறைவாகி உள்ளதாகவும் அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவரது மருத்துவமனையில் விசாரணை செய்தபோது  அவர் எம்பிபிஎஸ் படிக்கவில்லை என்பதும் யூடியூப் பார்த்து தான் சிகிச்சை செய்து வந்தார் என்பதும் தெரிய வந்தது. அதேபோல் சிறுவனுக்கும் பித்தப்பை கல்லை அகற்றுவது எப்படி என யூடியூபை பார்த்து அறுவை சிகிச்சை செய்ததாகவும் விசாரணை கண்டுபிடிக்கப்பட்டது

இந்த நிலையில்  தங்களது ஒப்புதல் இன்றி தனது மகனுக்கு அறுவை சிகிச்சை செய்ததாக சிறுவனின் பெற்றோர் குற்றச்சாட்டு கூறியுள்ள நிலையில் போலி மருத்துவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

போலி மருத்துவரால் 15 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

 

Edited by Siva