ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 9 செப்டம்பர் 2024 (18:50 IST)

கொலை செய்யப்பட்ட மருத்துவ மாணவியின் பெற்றோருக்கு பணம் வழங்கவில்லை: மம்தா பானர்ஜி

கொல்கத்தாவில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட மருத்துவ மாணவியின் பெற்றோருக்கு பணம் வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் பணம் வழங்கப்படவில்லை என முதல்வர் மம்தா பானர்ஜி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
 
கொல்கத்தா மருத்துவ மாணவி வழக்கு விவகாரம் நாளுக்கு நாள் பூதாகரமாகி வரும் நிலையில் இறந்த மருத்துவ மாணவியின் குடும்பத்திற்கு பணம் கொடுக்க மேற்கு வங்க அரசு முயற்சித்ததாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
 
ஆனால் இறந்த மருத்துவ மாணவியின் குடும்பத்திற்கு ஒருபோதும் பணம் கொடுக்கவில்லை என்றும் இது அவதுறை தவிர வேறொன்றும்  இல்லை என்றும் முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
 
நாங்கள் எப்போதும் மருத்துவ மாணவியின் பெற்றோர் பக்கம் தான் இருப்போம் என்றும் பெண்ணின் பெற்றோரிடம் இதனை தெரிவித்துள்ளேன் என்றும் பணம் கொடுக்கப்பட்டதா என்பதை குற்றஞ்சாட்டியவர்கள் தான் நிரூபிக்க வேண்டும் என மம்தா பானர்ஜி  தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva