காலில் கூட விழத்தயார்.. போராட்டக்காரர்களிடம் முதல்வர் மம்தா உருக்கம்..!
போராட்டத்தை கைவிடுங்கள் என்றும் அதற்காக காலில் கூட விழத் தயார் என்றும் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி போராட்டக்காரர்களிடம் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொல்கத்தாவில் ஆர்ஜி கர் மருத்துவமனையில் கடந்த வாரம் பெண் டாக்டர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து டாக்டர்கள், மருத்துவ மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் மாணவர்கள் மற்றும் மருத்துவர்கள் போராட்டம் காரணமாக மருத்துவ சேவை கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் நோயாளிகள் மருத்துவ சேவை கிடைக்காமல் உயிரிழந்து வருவதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில் சுதந்திர தின உரையில் மம்தா பானர்ஜி பெண் மருத்துவர் கொலை வழக்கு சிபிஐ விசாரித்து வருகிறது என்றும் வழக்கு விசாரணைக்கு அரசு முழு ஒத்துழைப்பு கொடுக்கும் என்றும் அதனால் மருத்துவர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
5 நாட்களாக போராட்டம் நடைபெறுவதால் சிறுவன், கர்ப்பிணி பெண் உள்பட மூன்று பேர் மருத்துவமனையில் உயிரிழந்தனர் என்றும் மருத்துவர்களின் காலில் கூட விழ தயாராக இருக்கிறேன், தயவு செய்து போராட்டத்தை கைவிடுங்கள் என்றும் உருக்கமாக கேட்டுக் கொண்டுள்ளார்.
Edited by Siva