ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: புதன், 14 ஆகஸ்ட் 2024 (10:05 IST)

டாஸ்மாக் கடையை மூடக்கோரி பூட்டு போடும் போராட்டம் - தரையில் படுத்து உருண்டு எதிர்ப்பு தெரிவித்த பெண்கள்!

கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள உலகலாப்பாடியில்
அரசு டாஸ்மார்க் கடை செயல்பட்டு வருகிறது. 
 
இங்கு மேல் சிறுவள்ளூர் மணலூர் அருளம்பாடி மங்களம் உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து மது அருந்த வருபவர்கள் குடித்துவிட்டு அடிக்கடி  அவ்வழியாக செல்பவர்களிடம் தகராறில் ஈடுபட்டு வருவது மட்டுமல்லாமல் விவசாயபயிர்களை சேதம் ஏற்படுத்தி வருவதாக கூறிகடந்த சில தினங்களாக அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
இந்த நிலையில்  அப்பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டவர்கள் டாஸ்மார்க் கடையை பூட்டுபோடும் போராட்டத்தில்ஈடுபட்டனர். 
தொடர்ந்து அவர்கள் டாஸ்மார்க் கடையை மூட வேண்டும் எனக் கூறி டாஸ்மாக் கடை முன்பு படுத்து போராட்டத்திலும் ஈடுபட்டனர்.தொடர்ந்து இந்த டாஸ்மார்க் கடை இருப்பதால் விவசாய பயிர்களை குடித்துவிட்டு சேதம் ஏற்படுத்தி வருவதாகவும் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
எனவே டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என கோரிக்கை விடுத்து கண்டன கோஷங்களை எழுப்பினர். தகவல் அறிந்து வந்த வடபொன்பரப்பி சப் இன்ஸ்பெக்டர் ஏழுமலை மற்றும்  மண்டல துணை வட்டாட்சியர் பாலசுப்பிரமணியன்,சங்கராபுரம் வடக்கு திமுக ஒன்றிய செயலாளர்  அசோக்குமார்,ஒன்றிய கவுன்சிலர் விமலா பாண்டுரங்கன்,முன்னாள் ஒன்றிய குழு துணை துணை தலைவர் திருமால் ஆகியோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டபொதுமக்களிடம்
பேச்சுவார்த்தை நடத்தினர்.
 
அப்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இது குறித்து பேசிடாஸ்மார்க் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அங்கு ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெரும்  பரபரப்பு ஏற்பட்டது.