செவ்வாய், 3 பிப்ரவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva

பிரதமர் மோடி நாட்டை விற்றுவிட்டார்.. ராகுல் காந்தி கடும் குற்றச்சாட்டு..!

பிரதமர் மோடி நாட்டை விற்றுவிட்டார்..  ராகுல் காந்தி கடும் குற்றச்சாட்டு..!
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடி மீது முன்வைத்துள்ள அடுக்கடுக்கான புகார்கள் தேசிய அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளன. நாடாளுமன்றத்தில் பேச அனுமதி மறுக்கப்பட்டதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், பிரதமர் மோடி அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலம் இந்தியாவை விற்றுவிட்டதாகக்குற்றம் சாட்டினார்.
 
அமெரிக்காவின் கடும் அழுத்தத்திற்கு பணிந்தே பிரதமர் இந்த முடிவை எடுத்துள்ளதாக குறிப்பிட்ட ராகுல் காந்தி, "மோடியின் பிம்பத்தை உருவாக்கியவர்களே இப்போது அதை உடைக்க தொடங்கியுள்ளனர்" என்று விமர்சித்தார். 
 
அமெரிக்காவில் அதானி மீதுள்ள வழக்குகள் உண்மையில் பிரதமர் மீதான வழக்குகள் தான் என்றும், எப்ஸ்டீன் கோப்புகளில் உள்ள வெளியிடப்படாத தகவல்கள் பிரதமருக்கு பெரும் அழுத்தத்தைத் தருவதாகவும் அவர் தெரிவித்தார். 
 
நாட்டின் உழைப்பை அடகு வைத்து பிரதமர் சமரசம் செய்துகொண்டதாக கூறிய ராகுல் காந்தியின் இந்த பேச்சு, பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே கடும் மோதலை உருவாக்கியுள்ளது.
 
Edited by Siva