ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: வியாழன், 15 ஆகஸ்ட் 2024 (09:31 IST)

மருத்துவமாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் கண்களில் கருப்பு துணி கட்டி பேரணி!

கடந்த சில தினங்களுக்கு முன்னதாக மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா அரசு மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவர் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளனர். இதனை கண்டித்தும் உடனடியாக அந்த குற்றவாளிக்கு தண்டனை வழங்க கோரியும் மருத்துவர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க கோரியும் நாடு முழுவதுமுள்ள மருத்துவர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
 
அதன் ஒரு பகுதியாக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரியில் மருத்துவம் பயிலும் மாணவர்களும் மருத்துவர்களும் ஏராளமானோர் திரண்டு கண்களில் கருப்பு துணி கட்டிக்கொண்டு மருத்துவக்கல்லூரி வளாகத்திற்குள்ளேயே பேரணியாக சென்றதுடன் மருத்துவர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க கோரியும் இறந்த மாணவிக்கு நீதி வழங்க கோரியும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.
 
மருத்துவர்கள் நீதி கேட்டு கண்களில் கருப்பு துணி கட்டிக்கொண்டு ஊர்வலமாக சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.