1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 15 ஆகஸ்ட் 2024 (07:31 IST)

கொல்கத்தாவில் மருத்துவ மாணவி படுகொலை: நீதி கோரி நடந்த போராட்டத்தில் வன்முறை

கொல்கத்தாவில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் அவருடைய மரணத்திற்கு நீதி கேட்டு நடந்த போராட்டத்தில் திடீரென வன்முறை வெடித்ததாக கூறப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கொல்கத்தாவில் முதுநிலை மருத்துவ படிப்பு படித்துக் கொண்டிருந்த மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த கொலைக்கு மருத்துவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து கடந்த சில நாட்கள் ஆகப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த போராட்டத்தில் பொதுமக்களும் கலந்து கொண்டிருக்கும் நிலையில் திடீரென இந்த போராட்டம் வன்முறையாக மாறிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளன. மருத்துவ மாணவி படித்த மருத்துவமனையின் வார்டுகள், காவல்துறை வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டதாகவும் இதனை அடுத்து காவல்துறை அதிகாரிகள் கண்ணீர் புகை கொண்ட வீசி தடியடி நடத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

கொல்கத்தா அரசு மருத்துவமனையில் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டம் வன்முறையாக மாறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edited by siva