1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Mallikarjune karke says about modi

மோடி என்ன பரமாத்மாவா.. கடவுளா? வரட்டும் பார்க்கலாம்: மல்லிகார்ஜூனே கார்கே ஆவேசம்..!

Mallikarjun Kharge
மோடி என்ன பரமாத்மாவா அல்லது கடவுளா? வரட்டும் பார்க்கலாம் என எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூனே கார்கே ஆவேசமாக இன்று பாராளுமன்றத்தில் பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  
 
பிரதமர் மோடியின் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வருகிறது 
 
இந்த விவாதத்தில் எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு இன்று பிரதமர் மோடி பதிலளிக்க உள்ளார். இந்த நிலையில் பிரதமர் மோடி இன்று நாடாளுமன்றத்திற்கு வந்து எதிர்க்கட்சியினர்களை கிழிக்க போகிறார் என பாஜக எம்பிகள் குரல் எழுப்பினர். 
 
அப்போது எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூனே கார்கே, ஆவேசமாக நாடாளுமன்றத்திற்கு பிரதமர் மோடி வரட்டும் ,  அவர் என்ன பரமாத்மாவா அல்லது கடவுளா? வரட்டும் பார்த்துக் கொள்ளலாம் என்று ஆவேசமாக கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
பெண் காவல் உதவி ஆய்வாளர் தற்கொலை முயற்சி.. வழக்கறிஞர்கள் காரணமா?