திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 9 ஆகஸ்ட் 2023 (12:49 IST)

பிரதமர் விரும்பினால் நான் சிறை செல்லவும் தயார்: ராகுல் காந்தி

பிரதமர் விரும்பினால் நான் சிறை செல்லவும் தயார் என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 
 
மோடி அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது ராகுல் காந்தி என்று பேசினார். அப்போது நாடு முழுவதும் நான் மேற்கொண்ட பயணம் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் இன்னும் நிறைவேறவில்லை
 
நடை பயணத்தின் போது இந்தியாவில் உள்ள விவசாயிகளின் நிலை மோசமாக இருப்பதை உணர்ந்தேன்.   என்னுடைய நடைப்பயணம் மக்கள் மீது அன்பு செலுத்தவே நடந்தது என்று கூறினார். 
 
மேலும் நான் பாராளுமன்றத்தில் மோடி அதானி உறவு குறித்து பேசப்போவதில்லை என்றும் எனவே பாஜக உறுப்பினர்கள் பயப்பட வேண்டாம் என்றும் அவர் தெரிவித்தார். அதுமட்டும் இன்றி பிரதமர் விரும்பினால் நான் சிறை செல்லவும் தயார் என்றும் அவர் கூறினார்.
 
Edited by Mahendran