1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Makara Vilakku Pooja Concludes at Sabarimala

நிறைவு பெற்றது மகரவிளக்கு பூஜை.. சபரிமலையில் நடை சாத்தப்படுவது எப்போது?

சபரிமலை
சபரிமலையில் மகரவிளக்கு பூஜை இன்றுடன் நிறைவடைந்ததை அடுத்து, வரும் 20ஆம் தேதி கோயில் நடை மூடப்படும் என்று சபரிமலை கோயில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆண்டு மண்டல பூஜை சீசன் கடந்த நவம்பர் மாதம் 16ஆம் தேதி தொடங்கி, டிசம்பர் 26ஆம் தேதி நிறைவடைந்தது. அதன் பின்னர் மகர விளக்கு பூஜை டிசம்பர் 31ஆம் தேதி தொடங்கி, இன்றுடன் முடிவுக்கு வருகிறது.

இதனை தொடர்ந்து, ஜனவரி 20ஆம் தேதி காலை பந்தளம் அரண்மனை பிரதிநிதி சாமி தரிசனம் செய்த பின் கோயில் நடை மூடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே இருப்பதால், ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்தவர்கள் மட்டுமின்றி உடனடி முன்பதிவு செய்தும் கோவிலுக்கு வரலாம் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இன்றும் நாளையும் மட்டுமே பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்றும் நாளை இரவு வழக்கமான பூஜை முடிந்தவுடன் நடை மூடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
3 நாட்கள் ஏற்றத்திற்கு பின் திடீரென சரிந்தது தங்கம் விலை.. இன்று ஒரு சவரன் எவ்வளவு?