3 நாட்கள் ஏற்றத்திற்கு பின் திடீரென சரிந்தது தங்கம் விலை.. இன்று ஒரு சவரன் எவ்வளவு?
தங்கம் விலை கடந்த மூன்று நாட்களாக உயர்ந்து கொண்டே சென்ற நிலையில், இன்று திடீரென தங்கம் விலை சரிந்து உள்ளது. இது தங்க நகை பிரியர்களுக்கு ஆறுதலை அளித்துள்ளது. இருந்தாலும், பெரிய அளவில் தங்கம் விலை சரியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஒரு கிராமுக்கு 15 ரூபாயும், ஒரு சவரனுக்கு 120 ரூபாய் மட்டுமே சரிந்து உள்ளது. இந்த நிலையில், சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை என்ன? ஒரு சவரன் விலை என்ன? என்பதை தற்போது பார்ப்போம்.
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில், இன்று திடீரென ஒரே நாளில் ஒரு சவரனுக்கு ₹120 குறைந்ததாக வெளிவந்த தகவல் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று ஒரு சவரன் தங்கம் ₹59,600 என்ற விலையில் விற்பனையான நிலையில், இன்று ₹120 குறைந்து ₹59,480 என விற்பனையாகியுள்ளது.
அதேபோல், 24 கேரட் தூய தங்கம் ஒரு கிராம் ₹8111 என்றும், எட்டு கிராம் ₹64,888 என்றும் விற்பனையாகி வருகிறது.
நேற்று ஒரு கிராம் வெள்ளி ₹104 என விற்பனையான நிலையில், இன்று அதே விலையிலும் ஒரு கிலோ வெள்ளி ₹104,000 என்ற விலையிலும் விற்பனையாகி வருகிறது.
தங்கம் விலை இன்னும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால், இந்த நேரத்தில் முதலீட்டுக்கு வாங்கி வைத்துக் கொள்வது நல்லது என பொருளாதார ஆலோசகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.
Edited by Mahendran