புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 7 மே 2021 (15:37 IST)

ஊரடங்கை மீறி ஊர் சுற்றிய டிஎஸ்பி மகன்; வளர்ப்பு நாய் கைது!

மத்திய பிரதேசத்தில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி வெளியே சுற்றிய டிஎஸ்பியின் மகன் மற்றும் வளர்ப்பு நாயை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் மாநிலம் தோறும் ஊரடங்குகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பொது வெளியில் மாஸ்க் அணியாமல் செல்பவர்கள், ஊரடங்கின் போது ஊர் சுற்றுபவர்கள் மீது சிறை தண்டனை, அபராதம் உள்ளிடவையும் விதிக்கப்படுகிறது.

இந்நிலையில் மத்திய பிரதேசத்தில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் இந்தூர் அடுத்த மனோரம்கஞ்சில் ஊரடங்கை மீறி இளைஞர் ஒருவர் தனது நாய்க்குட்டியுடன் வெளியே சுற்றியுள்ளார். இதற்காக அவரை அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் கண்டித்தபோது தான் டிஎஸ்பி மகன் என அவர்களிடம் இவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதனால் போலீஸார் காவல்துறை டிஎஸ்பி மகனான அனிஷ் நடாவையும், வரது நாய்க்குட்டி டோகி ஜூஜூவையும் கைது செய்து பின்னர் விடுவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.