வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 7 மே 2021 (08:47 IST)

கொரோனா நோயாளி சென்ற விமானம்; கழன்று விழுந்த சக்கரம்! – மும்பையில் பரபரப்பு!

நாக்பூரில் இருந்து கொரோனா நோயாளியை ஏற்றி சென்ற ஏர் ஆம்புலன்ஸ் விமான சக்கரம் கழன்று விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் கொரோனா நோயாளிகளை உடனடியா பிற மாநிலங்களுக்கு கொண்டு செல்ல ஏர் ஆம்புலன்ஸ் விமான சேவைகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் நாக்பூரில் இருந்து ஐதராபாத்துக்கு கொரோனா நோயாளி, அவரது, உறவினர் மற்றும் ஒரு மருத்துவரை சுமந்து கொண்டு ஏர் ஆம்புலன்ஸ் விமானம் ஒன்று புறப்பட்டது.

விமானம் பறக்க தொடங்கிய போது விமான சக்கரங்கள் கழண்டு விழுந்ததால் பரபரப்பு எழுந்தது. இதை தொடர்ந்து உடனடியாக மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில் உதவிகேட்டு அங்கு விமானம் தரையிறக்கப்பட்டது. விமானம் சில உராய்வுகளுடன் பத்திரமாக தரையிறங்கிய நிலையில் அதில் இருந்தவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்த சம்பவம் அங்கு சற்று பரபரப்பை ஏற்படுத்தியது.