நியூஸ் போடுறத தடுக்க முடியாது.. பாத்து கவனமா பேசுங்க! – தேர்தல் ஆணைய வழக்கு தள்ளுபடி!
சென்னை உயர்நீதிமன்றம் தேர்தல் ஆணையத்தை கடுமையாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது உச்சநீதிமன்றம்.
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் 5 மாநில சட்டமன்ற தேர்தலும் நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் தேர்தல் பரப்புரைகளில் கொரோனா கட்டுப்பாடுகள் பின்பற்றப்படுகிறதா என தேர்தல் ஆணையம் கவனிக்கவில்லை என சாடிய சென்னை உயர்நீதிமன்றம் தேர்தல் ஆணையத்தின் மீது கொலை வழக்கு பதிவு செய்யலாம் என பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதுகுறித்து தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் “நீதிமன்ற கருத்துகளை செய்தியாக்குவதை தடை விதிக்க கோருவதில் நியாயமில்லை. அதேசமயம் உயர்நீதிமன்றத்தில் பயன்படுத்தப்படும் மொழி குறித்து நீதிபதிகள் கவனமாக இருக்க வேண்டும்” என கூறி தேர்தல் ஆணையத்தின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.