வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 11 செப்டம்பர் 2020 (17:19 IST)

ஸ்பெஷல் கிளாஸ் என நம்பி சென்ற மாணவி… ஆசிரியரின் பாலியல் தொல்லையால் அதிர்ச்சி!

வேலூர் மாவட்டத்தில் ஸ்பெஷல் கிளாஸ் என சொல்லி மாணவியை கல்லூரிக்கு அழைத்த ஆசிரியர் பாலியல் தொல்லைக் கொடுத்துள்ளார்.

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அந்த மாணவி அரசு கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். ஐந்து மாதங்களாக கல்லூரி மூடப்பட்ட நிலையில் அவரது ஆசிரியர் ரமேஷ் என்பவர் ஸ்பெஷல் கிளாஸ் என சொல்லி அவரை வகுப்புக்கு வர சொல்லியுள்ளார். இவரும் அதை நம்பி செல்ல அங்கு வைத்து அவர் மாணவிக்குப் பாலியல் தொல்லைக் கொடுத்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியும் கோபமும் அடைந்த மாணவி அங்கிருந்து தப்பி வந்து பெற்றோரிடம் நடந்ததை சொல்லியுள்ளார். இதைக் கேட்ட மாணவியின் பெற்றோர் உடனடியாக குடியாத்தம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து ரமேஷைக் கைது செய்துள்ளனர்.