செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 11 செப்டம்பர் 2020 (17:15 IST)

பிப்ரவரி மாதம் அடக்கம் செய்யப்பட்டவர் திடீரென வீட்டுக்கு திரும்பியதால் பரபரப்பு!

பிப்ரவரி மாதம் அடக்கம் செய்யப்பட்டவர் திடீரென வீட்டுக்கு திரும்பியதால் பரபரப்பு!
குஜராத் மாநிலத்தில் பிப்ரவரி மாதம் கொலை செய்யப்பட்டதாக கருதி அடக்கம் செய்யப்பட்டவர் திடீரென ஐந்து மாதங்கள் கழித்து வீடு திரும்பியுள்ளதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
குஜராத் மாநிலத்தை சேர்ந்த கூலி தொழிலாளி ஒருவர் அவரது இரண்டு சகோதரர்களால் கொலை செய்யப்பட்டதாக கூறி காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இதனையடுத்து இரண்டு சகோதரர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் 
 
இந்த நிலையில் கொலை செய்யப்பட்டதாக கருதப்பட்ட அந்த கூலி தொழிலாளி ஐந்து மாதங்கள் கழித்து தற்போது வீடு திரும்பியுள்ளார். கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக தன்னால் வீடு திரும்பவில்லை என்று அவர் தனது குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார் 
 
இதனை அடுத்து இந்த வழக்கை விசாரணை செய்த போது போலீசார் அவரது இரண்டு சகோதரர்களை துன்புறுத்தி குற்றத்தை ஒப்புக் கொள்ள வைத்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் போலீசார் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்
 
இந்த நிலையில் கொலை செய்யப்பட்டு இறந்ததாக கருதி தகனம் செய்த பிணம் யாருடையது என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. ஐந்து மாதங்கள் கழித்து அந்த பிணத்தை தோண்டி எடுத்து அவர் யார் என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்
 
ஐந்து மாதம் கழித்து இறந்ததாக கருதப்பட்டவர் திடீரென வீட்டிற்கு திரும்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது