1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Lorry accident in andhra pradesh

நடுரோட்டில் கவிழ்ந்த பீர் லாரி.. போட்டி போட்டு பாட்டில்களை அள்ளி சென்ற குடிமகன்கள்..!

ஆந்திரா
ஆந்திர மாநிலத்தில் நடுரோட்டில் பீர் பாட்டில் ஏற்றி வந்த லாரி திடீரென கவிழ்ந்ததை அடுத்து அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் பீர் பாட்டில்களை அள்ளிக்கொண்டு சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
ஆந்திர மாநிலத்தில் உள்ள அனகாபள்ளி என்ற குடோனிலிருந்து நர்சப்பட்டினம் என்ற பகுதிக்கு பீர் பாட்டில் லோடு ஏற்றி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் திடீரென லாரி கவிழ்ந்ததை அடுத்து அந்த லாரியில் ஏற்றப்பட்டிருந்த பீர் பாட்டில் பெட்டிகள் கீழே விழுந்து சிதறின. 
 
இதனை அடுத்து நடுரோட்டில் பீர் பாட்டில்கள் கிடந்ததை பார்த்த அந்த பகுதி மக்கள் உடனடியாக ஓடி வந்து பீர் பாட்டில்களை அள்ளி சென்றனர். ஒரு சிலர் பெட்டி பெட்டியாக எடுத்து சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
லாரி கவிழ்ந்த நிலையில் லாரி டிரைவருக்கு என்ன ஆச்சு என்பதை ஒரு குடிமகன்கள் கூட கவலை கொள்ளாமல் பீர் பாட்டில்களை எடுத்துக்கொண்டு செல்வதிலேயே கவனத்துடன் இருந்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
நாளை முதல் 10ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு! இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!