1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 6 ஜூன் 2023 (12:42 IST)

சாக்லேட், சிப்ஸ் 6 சிறுமிகள் பாலியல் பலாத்காரம் : தலைமை ஆசிரியர் கைது..!

6 பள்ளிச் சிறுமிகளை சாக்லேட் சிப்ஸ் கொடுத்து ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்த தலைமை ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள துங்கர்பூர் என்ற பகுதியில் அரசு பள்ளியில் படிக்கும் ஆறு சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக தலைமை ஆசிரியர் ரமேஷ் சந்திரா கட்டாரா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். 
 
இவர் 8 வயது முதல் 12 வயது உள்ள சிறுமிகள் விடுமுறையின் போது விளையாட வந்தவர்களை தனது காரில் வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக தெரிகிறது. மேலும் சாக்லேட் மற்றும் சிப்ஸ்கள் கொடுத்து பணமும் கொடுத்து சிறுமிகளை தன் வசப்படுத்தியதாகவும் வெளியே சொன்னால் கொன்று விடுவேன் என்று மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. 
 
மேலும் அவர் தொடர்ச்சியாக ஆபாச படங்களை பார்த்து வந்துள்ளார் என்றும் ஆபாச படங்களை பார்த்த பிறகு சிறுமியை அழைத்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாகவும் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
 
Edited by Mahendran