வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 31 மே 2023 (18:45 IST)

கேன்சரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விஜய் ஆண்டனி உதவி?

கேன்சரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நடிகர் விஜய் ஆண்டனி  உதவிக்கரம் நீட்டியுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.
 
விஜய் ஆண்டனி நடிப்பில் சசி இயக்கத்தில் 2016ல் வெளியாகி பெரும் ஹிட் அடித்த படம் பிச்சைக்காரன்.  இதையடுத்து,  விஜய் ஆண்டனி தயாரித்து, இயக்கி நடித்து, இசையமைத்திருந்த  “பிச்சைக்காரன் 2”  படம் கடந்த 19 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியானது.
 
இப்படம் வெளியாகி நல்ல ஓபனிங் கொடுத்த நிலையில், தன்  நடிப்பு கேரியலில் இது பெரிய ஓபனிங் என்று விஜய் ஆண்டனி பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் இந்த படம்  இதுவரை 35 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து வெற்றிகரமாக தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது..

சமீபத்தில்,  திருப்பதி மலை அடிவாரத்தில் உள்ள பிச்சைக்காரர்களுக்கு செருப்பு, போர்வை, பிளாஸ்டிக் விசிறி உள்ளிட்ட பொருட்களை அடங்கிய ஆண்டி பிகிலி கிட்டை வழங்கினார். இதையடுத்து,   ஆந்திராவில் ராஜமுந்திரிக்குச் சென்ற அவர் சாலையில் அமர்ந்திருந்த யாசகர்கள் சிலரை பார்த்து, அவர்களை அருகிலுள்ள ஒரு ஸ்டார் ஓட்டலுக்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு விருந்து வழங்கியுள்ளர்.

அப்போது, தன் கையால் அவர்களுக்குப் பரிமாறினார். இதுகுறித்த புகைப்படம்  வீடியோ வைரலானது.

இந்த நிலையில்,  ஆந்திராவில் உள்ள பிரபல மருத்துவமனையில் புற்று நோய்க்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகளைச் சந்தித்து அவர்களுக்கு உதவி செய்வதாக விஜய் ஆண்டனி கூறியதாகத் தெரிகிறது. அவரது செயலுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

இதுகுறித்த புகைப்படங்கள் இணையதங்களில் வைரலாகி வருகிறது.