திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 6 ஆகஸ்ட் 2019 (17:33 IST)

முதுகெலும்பு உள்ளவர்களுக்கே மக்களவை... ரவீந்தரநாத் குமாரை விமர்சித்த டி.ஆர்.பாலு !

காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யும் மசோதா மீதான விவாதம் இன்று மக்களவையில் நடைபெற்றது. அப்போது முதுகெலும்பு உள்ளவர்களுக்கே மக்களவை உள்ளது என அதிமுக எம்.பியை,திமுக எம்.பி டி ஆர் பாலு விமர்சனம் தெரிவித்தார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து அளிக்கும்  370 பிரிவு மற்றும் 35 ஏ ஆகியவற்றை ரத்து செய்து,ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் ஆகியவை இரு யூனியன் பிரதேசங்களாகச் செயல்படும் என உள்துறை அமைச்சர் தெரிவித்தார். இதன் பின்னர் நேற்று பாராளுமன்ற மேலவையில் ஜம்மு - காஷ்மீர், லடாக் என பிரிப்பதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடைபெற்று நிறைவேற்றபட்டது.
 
இந்நிலையில் இன்று மக்களவையில் காஷ்மீர் விவகாரம் விவாதத்துக்கு வந்தபோது, திமுக எம்.பி டி. ஆர். பாலு ஜம்மு - காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது இவ்விவகாரம் குறித்து கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களுக்கும் தெரியப்படுத்தவில்லை என விமர்சித்தார். 
அப்போது அதிமுக எம்.பி ரவீந்தரநாத் குமார் குறுக்கிட்டு பேச முயன்றார். பாஜக  எம்.பிக்கள், மற்றும் அதன் ஆதரவு கட்சிகளும் எதிர் முழக்கமிட்டனர்.  இதனைத் தொடர்ந்து ரவீந்தரகுமார் பேச முயற்சி மேற்கொண்டார். அப்போது பேசிய டி.ஆர்.பாலு மக்களவை முதுகெலும்பு உள்ளவர்களுக்கே உள்ளது. உங்களைப் போன்றவர்களுக்கு இல்லை என்று ரவீந்தரநாத்தை விமர்சித்தார். இதற்கு திமுக எம்.பிக்கள் சிரித்தனர்.