1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 10 பிப்ரவரி 2021 (13:25 IST)

ரயில்வே ஸ்டேசன் அருகே உலா வரும் சிங்கம்! – வைரலாகும் வீடியோவால் பரபரப்பு!

குஜராத் மாநிலம் ஜுனாகத் பகுதியில் மக்கள் நடமாடும் பகுதிகளில் சிங்கம் ஒன்று உலா வரும் வீடியோ வைரலாகி வருகிறது.

இந்தியாவில் சிங்கங்களுக்கான பூங்காவாக அரியப்படுவது குஜராத்தில் உள்ள கிர் தேசிய பூங்கா. இந்நிலையில் கிர் பூங்காவை சுற்றியுள்ள பகுதிகளில் சிங்கங்களின் நடமாட்டம் அடிக்கடி தென்படுவது வாடிக்கை. இந்நிலையில் கிர் தேசிய பூங்காவிலிருந்து 80கிமீ தொலைவில் உள்ள ஜுனாகத் நகரில் மக்கள் வாழும் பகுதிகளில் சிங்கம் ஒன்று இரவு நேரங்களில் உலா வரும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

ஜுனாகத் பகுதியில் ரயில்வே நிலையம் எதிரே உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றின் நுழைவு பாதையின் தடுப்புகளை சிங்கம் தாவி குதித்து சாவகாசமாக சாலையில் செல்வதும், வளாகத்தில் உள்ள கார்களின் நடுவே நடந்து செல்வதும் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.