வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 9 பிப்ரவரி 2021 (09:44 IST)

அரவிந்த் கெஜ்ரிவால் மகளிடம் ஆன்லைன் மோசடி! – வலைவிரிக்கும் சைபர் க்ரைம்!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மகளிடம் ஆன்லைன் மோசடி கும்பல் பணத்தை மோசடி செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீப காலமாக ஆன்லைன் மூலம் பணம் மோசடி செய்யும் கும்பல் இந்தியாவில் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்த கும்பலிடம் சாதாரண மக்கள் ஏமாந்து வரும் நிலையில் டெல்லி முதல்வர் மகளும் பணத்தை இழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மகள் ஹர்ஷிதா சமீபத்தில் பழைய சோபா ஒன்றை ஆன்லைனில் விற்பதற்கு OLX தளத்தில் விளம்பரம் செய்துள்ளார். அதை பார்த்து அவரை தொடர்பு கொண்ட கும்பல் ஒன்று முதலில் சிறிது பணத்தை அனுப்பியுள்ளனர். பின்னர் ஒரு க்யூஆர் கோடை அனுப்பி அதன் மூலம் 34 ஆயிரம் ரூபாயை ஹர்ஷிதாவின் வங்கி கணக்கில் இருந்து திருடியுள்ளனர்.

இதுகுறித்து டெல்லி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் சைபர் க்ரைம் போலீஸார் குற்றவாளிகளை கண்டுபிடிக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.