செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 10 பிப்ரவரி 2021 (12:39 IST)

உளவாளி என கைது செய்யப்பட்ட மூதாட்டி! – இந்தியாவில் காலமானார்!

இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் சென்ற மூதாட்டி கைது செய்யப்பட்டு பல ஆண்டுகள் சிறையில் இருந்த நிலையில் விடுதலையான சில வாரங்களில் காலமானார்.

இந்தியாவின் அவுரங்காபாத்தை சேர்ந்த மூதாட்டி ஹசினா பேகம். இவர் கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பாக தனது உறவினர்களை சந்திக்க பாகிஸ்தான் சென்றுள்ளார். அப்போது அவரது பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்கள் தொலைந்து போனதால் அவரை உளவாளி என கருதிய பாகிஸ்தான் அரசு கைது செய்து சிறையில் அடைத்தது.

பல ஆண்டுகால போராட்டத்திற்கு பிறகு ஹசினா பேகம் குற்றமற்றவர் என்று நிரூபிக்கப்பட்ட நிலையில் கடந்த சில வாரங்கள் முன்னதாக அவர் விடுதலை செய்யப்பட்டார். விடுதலை செய்யப்பட்டு சொந்த நாடு திரும்பிய ஹசினா பேகம் உடல்நல குறைவால் தற்போது உயிரிழந்துள்ளார்.