வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 11 ஜூன் 2019 (17:34 IST)

எந்த சடங்கும் இல்லாமல் தகனம் செய்யப்பட்டார் கிரிஷ் கர்னாட்:காரணம் என்ன??

கிரிஷ் கர்னாட் அவர்களின் உடலை எந்த சடங்கும் சம்பிரதாயமும் இன்றி தகனம் செய்யப்பட்ட செய்தி பலருக்கும் கேள்வியை எழுப்பியுள்ளது.



எழுத்தாளர், நாடக ஆசிரியர், நடிகர் என பல முகங்களை கொண்டவர் கிரிஷ் கர்னாட். தமிழில் காதலன்,ரட்சகன்,ஹே ராம்,போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும் கலைத்துறையில் இவரது சாதனையை பாராட்டி மத்திய அரசு இவருக்கு பத்ம பூஷன் விருது வழங்கி கவுரவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கிரிஷ் கர்னாட் நேற்று காலை உடல் நலக்குறைவால் காலமானார். தற்போது அவரது உடலை எந்த சடங்கும் சம்பிரதாயமும் இன்றி தகனம் செய்துள்ளனர் என செய்தி வெளியாகி உள்ளது.

கிரிஷ் கர்னாட்டின் குடும்பத்தினர்,உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே அவரது இறுதி ஊர்வலத்தில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரியவருகிறது.

இது குறித்து கிரிஷ் கர்னாட்டின் குடும்பத்தினரிடம் கேட்டபோது, தன்னுடைய உடலை எந்த சாஸ்திர சம்பிரதாயமும் இன்றி தகனம் செய்யவேண்டும் என்பதே அவரது இறுதி ஆசை என்று பதிலளித்துள்ளதாக செய்திகள் தெரிவிகின்றன.

மேலும் கிரிஷ் கர்னாட்டின் கடைசி ஆசையை நிறைவேற்றும் வண்ணமாக அவருக்கு செய்யவிருந்த அரசு மரியாதையையும் கர்னாடக அரசு கைவிட்டதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.