முதன்முறையாக தன் இரட்டை குழந்தையின் கியூட் புகைப்படத்தை வெளியிட்ட ப்ரஜன்!

Last Updated: செவ்வாய், 11 ஜூன் 2019 (11:38 IST)
சின்னத்தம்பி சீரியல் மூலம் பலரது ஃபேவரட் நடிகராக மாறியவர் ப்ரஜின். இவரின் மனைவி சாண்ட்ரா தலையணை பூக்கள் உள்ளிட்ட சில தொடர்களில் நடித்துள்ளார். மீடியா உலகில் கடினப்பட்டு வாய்ப்பை தேடிய இவர்கள் இருவரும் வெள்ளித்திரை, சின்னத்திரை என வலம் வந்தார்கள்.  
 
திருமணம் ஆகி 10 ஆண்டுகள் கழித்து கர்ப்பமாக இருந்த சான்ராவிடம்  ஏன் இத்தனை காலமா குழந்தை பெற்றுக்கொள்ளவில்லை என கேட்டதற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உருக்கமுடன் பதிலளித்திருந்தார். அதாவது, காதல் திருமணம் செய்துகொண்டதால், பண உதவி மற்றும் ஆறுதல் சொல்ல கூட துணைக்கு யாருமே இல்லை. எங்களிடம் இருந்த சில பழைய உடைகளை மட்டுமே கொண்டுவந்து தான் எங்கள் வாழ்க்கையை துவங்கினோம். எங்களை காப்பாற்றி கொள்ள இத்தனை வருடங்கள் வேலை, வேலை என ஓடியதால் குழந்தை பற்றி யோசிக்க முடியவில்லை. ப்ரஜின் வேலை இன்றி சில காலம் இருந்தார். தற்போது சின்னத்தம்பி சீரியல் மூலம் அவருக்கு நல்ல பிரேக் கிடைத்துள்ளதால், நாங்கள் குழந்தை பெற முடிவெடுத்தோம்" என சாண்ட்ரா கூறியிருந்தார்.
 
கடந்த 10 ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்து வந்த இந்த தம்பதிகளுக்கு காத்திருந்ததற்கு ஏற்றவாறே இரட்டை மகிழ்ச்சியாக அவர்களுக்கு இரட்டை குழந்தை பிறந்தனர். இந்த மகிழ்ச்சியான செய்தியை சமூகவலைத்தளத்தில் பகிர்ந்து தங்களுக்கு சந்தோஷத்தை வெளிப்படுத்திய அவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்தது.
 
இந்நிலையில் தற்போது ப்ரஜின் இன்ஸ்டாகிராமில் ஒரு போட்டோ பதிவிட்டுள்ளார். அதில் மனைவி சாண்ட்ரா தன் இரண்டு குழந்தைகளையும் தோளில் வைத்து அவ்வளவுக்கு மகிழ்ச்சியாக தென்படுகிறார். இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவி எக்கச்சக்கமான லைக்ஸ்களை குவித்து வருகிறது. 
 


இதில் மேலும் படிக்கவும் :