நடிகர் சசிகுமாரை கைது செய்த மும்பை போலீசார்!

Last Updated: செவ்வாய், 11 ஜூன் 2019 (14:50 IST)
இயக்குனர் மற்றும் நடிகருமான சசிகுமார் அம்மாவின் பாசம், மிடில் க்ளாஸ் குடும்பம், உறவுகள் , நட்பு என கிராப்புற வாழ்வை மையப்படுத்தி சித்தரிக்கும் கதைகளில் கட்சிதமாக பொருந்துபவர் நடிகர் சசிகுமார். அதுபோன்ற படங்களில் அவரின் யதார்த்தமான நடிப்பு இவர் சமீபத்தில் வெளிவந்த பேட்ட படத்தில் ரஜினியின் உயிர் நண்பராக நடித்திருந்தார்.
 
இந்நிலையில் தற்போது விஜய் ஆண்டனியின் நடிப்பில் வெளிவந்த சலீம் படத்தின் இயக்குனர் என்.வி.நிர்மல்குமாரின் அடுத்த படத்தில் சசிகுமார் நடித்து வருகிறார். இப்படத்தை கல்பதரு பிக்சர்ஸ் P.K.ராம் மோகன் தயாரிக்கிறார். 
 
இன்னும் பெயரிடபடாத இப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது மும்பையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் ஆள் நடமாட்டம் அதிகம் உள்ள மும்பை தெருக்களில் இப்படத்தின்  படப்பிடிப்பை நடத்தினர். அப்போது சண்டை காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில் நடிகர் சசி குமார் வில்லன்களை விரட்டி சென்று சசிகுமார் தாக்குவதுபோன்று ஒரு காட்சியின் நடித்துவந்தார். 
அதை பார்த்த அப்பகுதி மக்கள் உண்மையாகவே சண்டை போடுகிறார்கள் என  கருதி அப்பகுதி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த போலீசார் சசிகுமார் உட்பட அங்கிருந்த படக்குழுவினரை சுற்றி வளைத்தனர். பின்னர் படப்பிடிப்பிற்கான  சண்டைக்காட்சி என தெரிவித்தும் அந்த போலீசார் நம்பவில்லை. இதனால்  கேமரா மற்றும் சுற்றி நின்ற படப்பிடிப்பு தொழிலாளர்களை காட்டி அவர்களை நம்ப வைத்தார்கள்.
 
பின்னர் அங்கிருந்த தமிழர்கள் சசிகுமாரை அடையாளம் கண்டு  செல்பீ எடுத்து சென்றனர். இதனை கண்ட போலீசார் படக்குழுவினரை முழுமையாக நம்பி படப்பிடிப்புக்கு இடைஞ்சல் வராதவகையில் அறிவுரை வழங்கிவிட்டு சென்றனர். இந்த சம்பவத்தால் படப்பிடிப்பு தளத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 


இதில் மேலும் படிக்கவும் :