50 வருட அக்ரிமெண்ட்.. அதானி கையில் திருவனந்தபுரம் விமான நிலையம்!
திருவனந்தபுரம் விமான நிலையத்தை நிர்வகிக்கும் பொறுப்பை 50 ஆண்டுகளுக்கு அதானி நிறுவனம் ஏற்றுள்ளது.
திருவனந்தபுரம் விமான நிலையத்தை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஆண்டே கேரள சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் மாநில அரசின் ஆட்சேபனைகளை புறக்கணித்து திருவனந்தபுரம் விமான நிலையத்தை அதானி குழுமத்திற்கு குத்தகைக்கு விட மத்திய அரசு முடிவெடுத்தது. இதுகுறித்த மேல்முறையீடு வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் இந்திய விமான நிலைய ஆணையம் மற்றும் அதானி குழும அதிகாரிகள் இன்று விமான நிலையத்தில் நடந்த விழாவில் கலந்துக் கொண்டார்கள். அதில் அதானி நிறுவனத்துடன் செய்துக்கொண்டுள்ள ஒப்பந்தத்தின்படி அடுத்த 50 ஆண்டுகளுக்கு திருவனந்தபுரம் விமான நிலையத்தை இயக்கவும், நிர்வகிக்கவும், மேம்படுத்தவும் அதானி நிறுவனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.