1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. raid in former minister vijayabaskar house

முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு!

விஜயபாஸ்கர்
முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் இன்று அதிகாலை முதல் திடீரென லஞ்ச ஒழிப்பு துறை சோதனை செய்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் இன்று சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அவருக்கும் அவருக்கு தொடர்புடைய நாற்பத்தி மூன்று இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடந்து வருவதாக லஞ்ச ஒழிப்பு துறையினர் தெரிவித்துள்ளனர் முன்னாள் அமைச்சர் அவர்களுக்கு தொடர்புடைய சென்னை செங்கல்பட்டு திருச்சி காஞ்சிபுரம் புதுக்கோட்டை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் நாற்பத்தி மூன்று இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
அடுத்த கட்டுரையில்
பள்ளிகளுக்கு இன்று விடுமுறையா?