1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. kerala cancel sunday full lockdown

கேரளாவில் ஞாயிறு ஊரடங்கு ரத்து: அதிரடி அறிவிப்பு

கேரளா
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கேரளாவில் கடந்த சில வாரங்களாக ஞாயிறு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது என்பது தெரிந்ததே. 
 
இந்த நிலையில் கேரளாவில் படிப்படியாக கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து ஞாயிறு அன்று பாதிக்கப்பட்ட முழு ஊரடங்கு ரத்து செய்யப்படுவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது 
 
இதுகுறித்து முதல்வர் பினராய் விஜயன் அவர்கள் மருத்துவ வல்லுனர்களுடன் ஆலோசித்து ஞாயிறன்று அறிவிக்கப்பட்ட முழு ஊரடங்கு வாபஸ் பெற்றுக் கொள்வதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
மேலும் வரும் இருபத்தி எட்டாம் தேதி முதல் பள்ளிகள் கல்லூரிகள் முழுமையாக செயல்படும் என்றும் அதுவரை 50 சதவீத மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்
அடுத்த கட்டுரையில்
40.03 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு!