வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 8 பிப்ரவரி 2022 (19:50 IST)

கேரளாவில் 30 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிப்பு!

கேரளாவில் இன்று ஒரே நாளில் சுமார் 30 ஆயிரம் பேர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என மாநில சுகாதார துறை அறிவித்துள்ளது. 
 
கேரள மாநிலத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29,471 என்றும் இன்று ஒரே நாளில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 28  என்றும் கேரள மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது 
 
கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக 30 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது கேரள அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை காரணமாக படிப்படியாக குறைந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த எண்ணிக்கை இன்னும் சில நாட்களில் குறைந்து கேரள மாநிலம் கொரோனாவில் இருந்து மீண்டு விடும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர்.