1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 23 டிசம்பர் 2020 (12:33 IST)

கன்னியாஸ்திரியை கொன்ற பாதிரியாருக்கு தண்டனை! – 28 வருடங்களுக்கு பிறகு கிடைத்த நீதி!

கேரளாவை உலுக்கிய கன்னியாஸ்திரி கொலை வழக்கில் 28 ஆண்டுகள் கழித்து குற்றவாளிகளுக்கு தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் கோட்டயம் பகுதியில் உள்ள மடாலயத்தில் சேவை செய்து வந்த 19 வயது கன்னியாஸ்திரி அபயா. 1992ல் இவர் இறந்த நிலையில் கான்வெண்ட் அருகே கண்டெடுக்கப்பட்ட நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்டதாக முதலில் கூறப்பட்டது. ஆனால் பின்னர் அவர் கொலை செய்யப்பட்டு இறந்தது தெரிய வந்தது. இதுகுறித்து சிபிஐ விசாரணை மேற்கொண்ட நிலையில் பாதிரியார் தாமஸ் மற்றும் சிஸ்டர் செஃபி ஆகியோரால் கொல்லப்பட்டது தெரிய வந்தது.

பாதிரியார் தாமஸும், சிஸ்டர் செஃபியும் உல்லாசமாக இருந்ததை அபயா பார்த்துவிட்டதால் உண்மையை மறைக்க அவரை கொலை செய்ததாக தெரிய வந்தது. கடந்த 28 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கில் இன்று சிபிஐ நீதிமன்றம் பாதிரியார் தாமஸுக்கும், சிஸ்டர் ஷெஃபிக்கும் ஆயுள் தண்டனை வழக்கி உத்தரவிட்டுள்ளது.