வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By simbu
Last Modified: செவ்வாய், 22 டிசம்பர் 2020 (18:42 IST)

சபரிமலைக்கு மாலை போட்ட சிம்பு: வைரலாகும் புகைப்படம்!

சபரிமலைக்கு மாலை போட்ட சிம்பு: வைரலாகும் புகைப்படம்!
நடிகர் சிம்பு என்றாலே படப்பிடிப்புக்கு தாமதமாக வருவார் என்றும் ஒரு படத்தை முடித்துக் கொடுக்க வருடக்கணக்கில் காலம் எடுத்துக் கொள்வார் என்றும் கெட்ட பெயர்கள் இருந்தன. ஆனால் அதற்கு நேர் எதிர் மாறாக தற்போது அவர் சுறுசுறுப்பாக படங்களை முடித்து வருகிறார் 
 
சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்த ’ஈஸ்வரன்’ திரைப்படம் 23 நாட்களில் படப்பிடிப்பு முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது/ அதேபோல் மாதக்கணக்கில் நடக்கவேண்டிய மாநாடு படத்தின் படப்பிடிப்பையும் விரைவில் அவர் முடிக்க உள்ளார் 
 
இந்த நிலையில் ஆன்மீகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்ட நடிகர் சிம்பு ஒவ்வொரு வருடமும் சபரிமலைக்கு மாலை அணிந்து செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அந்த வகையில் இந்த ஆண்டும் அவர் சபரிமலைக்கு மாலை போட்டு உள்ளார் 
 
இதுகுறித்த புகைப்படத்தை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். மாலை அணிந்து கருப்பு உடை அணிந்து உட்கார்ந்தபடி சாமி கும்பிட்டபடி இருக்கும் இந்த புகைப்படத்தை தற்போது அவருடைய ரசிகர்கள் வைரலாகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது