வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 22 டிசம்பர் 2020 (19:14 IST)

சிறப்பு சட்டமன்ற கூட்டத்தொடருக்கான அறிவிப்பாணையை வெளியிட ஆளுநர் மறுப்பு!

சிறப்பு சட்டமன்ற கூட்டத்தொடருக்கான அறிவிப்பாணையை வெளியிட ஆளுநர் மறுப்பு!
கேரள மாநில அரசு சிறப்பு சட்டமன்றக் கூட்டத்திற்கு அறிவிப்பாணையை சமீபத்தில் வெளியிட்டது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த சிறப்பு சட்டமன்றக் கூட்டத் தொடருக்கான அறிவிப்புகளை வெளியிட அம்மாநில ஆளுநர் மறுப்பு தெரிவித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
மத்திய அரசின் புதிய வேளாண்மை சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம் சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை கூட்ட கேரள அரசு திட்டமிட்டது. இதற்கான சிறப்பு அறிவிப்பாணை வெளியிடப்பட்ட நிலையில் இந்த அறிவிப்பை வெளியிட கேரள மாநில ஆளுநர் ஆரிப் கான் அவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
இதனை அடுத்து கேரள மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே புதுவை உள்பட ஒருசில மாநிலங்களில் முதல்வருக்கும் ஆளுநருக்கும் கருத்து வேறுபாடு இருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில் தற்போது கேரள அரசின் முடிவுக்கு ஆளுநர் தடை விதித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது