1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 22 டிசம்பர் 2020 (12:14 IST)

லண்டனிலிருந்து டெல்லி வந்த 5 பேருக்கு கொரோனா! – உஷாராகும் பெங்களூர், சென்னை!

இங்கிலாந்தில் வீரியமிக்க புதிய கொரோனா பாதிப்பு தொடங்கியுள்ள நிலையில் லண்டனிலிருந்து இந்தியா வந்தவர்களுக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸிற்கு கிட்டத்தட்ட மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் இங்கிலாந்தியில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவ தொடங்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் லண்டனில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் நிறுத்தப்பட்டு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது

இந்நிலையில் இங்கிலாந்தை தொடர்ந்து ஆஸ்திரேலியா, இத்தாலி, ஜெர்மனியிலும் புதிய கொரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ள நிலையில் இங்கிலாந்து – இந்தியா விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதுடன், இங்கிலாந்திலிருந்து வருபவர்களை மத்திய அரசு தனிமைப்படுத்தி வருகிறது.

இந்நிலையில் லண்டனில் இருந்து டெல்லி வந்த பயணிகள் 266 பேரையும் தனிமைப்படுத்தி கொரோனா பரிசோதனை செய்ததில் 5 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் பெங்களூரிலும் லண்டனிலிருந்து வந்த ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால், பெங்களூர் விமான நிலையம் வந்த விமானத்தில் பயணித்தவர்களை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

சென்னையிலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில் கடந்த 1 மாதத்தில் பிரிட்டனிலிருந்து சென்னை வந்தவர்களின் பட்டியலை தயாரித்து நடவடிக்கை எடுக்க உள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். இந்தியாவின் முக்கிய நகரங்களில் இங்கிலாந்து தொடர்புடைய கொரோனா பாதித்தவர்கள் கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.