1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. kavitha says about ayothi ramar temple open

இந்துக்களின் கனவு நனவாகியுள்ளது.. அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா குறித்து கவிதா..!

அயோத்தி
அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்பட உள்ளதால் இந்துக்களின் கனவு நனவாகியுள்ளதாக முன்னாள் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மகள் கவிதா தெரிவித்துள்ளார். 
 
அயோத்தியில் ஜனவரி மாதம் 22ஆம் தேதி ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட இருக்கும் நிலையில் அடுத்த மாதம் 16ஆம் தேதி அதற்கான பூஜைகள் தொடங்குகின்றன. 
 
இதற்காக 4000 துறவிகள் வரவழைக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த நிலையில் தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவின் மகள் மற்றும் பிஆர்எஸ் கட்சியின் மேலவை உறுப்பினர் கவிதா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறிய போது கூறியதாவது
 
அயோத்தியில் ஸ்ரீ சீதாராமா சந்திர ஸ்வாமிசிலை பிரதிஷ்டை செய்யப்படுவதன் மூலம் உலகில் உள்ள கோடிக்கணக்கான இந்துக்களின் கனவு நனவாகியுள்ளது. இதை தெலங்கானா மாநிலத்துடன் இணைந்து ஒட்டுமொத்த நாடும் வரவேற்கிறது’’ என குறிப்பிட்டுள்ளார்.
 
Edited by Mahendran
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
வெள்ள பாதிப்புக்குள்ளான மக்களுக்கு உதவ ட்ரோன்களை பயன்படுத்தி இருக்கலாம்: வல்லுனர்கள் கருத்து