வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 30 நவம்பர் 2023 (12:14 IST)

தேர்தல் நாளில் வாக்கு சேகரித்ததாக முதல்வர் மகள் கவிதா: தெலுங்கானா காங்கிரஸ் புகார்

தெலுங்கானா மாநிலத்தில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் தேர்தல் நாளில் முதல்வர் சந்திரசேகர் ராவ் மகள் கவிதா வாக்கு சேகரித்ததாக தெலுங்கானா காங்கிரஸ் குற்றம் சாட்டி உள்ளது  
 
தெலுங்கானா மாநிலத்தில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவுகள் தொடங்கிய நிலையில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் இன்று வாக்களித்து வருகின்றனர். எஸ்.எஸ்.ராஜமெளலி, சிரஞ்சீவி, ஜூனியர் என்டிஆர் உள்பட பல திரை உலக பிரபலங்களும் தங்கள் குடும்பத்தாருடன் வரிசையில் இன்று வாக்களித்தனர். 
 
இந்த நிலையில் இன்று வாக்களிக்க வந்த  முதல்வர் சந்திரசேகர் ராவ் அவர்களின் மகள் கவிதா வாக்களித்துவிட்டு  பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது பிஆர்எஸ் கட்சிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். 
 
இதனை சுட்டிக்காட்டி உள்ள தெலுங்கானா காங்கிரஸ் தேர்தல் நாளில் வாக்கு சாவடிக்கு வெளியே நின்று வாக்கு சேகரித்ததாக கவிதா மீது குற்றம் சாட்டி உள்ளனர். இது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாகும் என்றும் அவர் மீது தேர்தல் அதிகாரி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எடுத்துள்ளனர்
 
 இது குறித்து என்ன முடிவெடுக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
Edited by Siva