ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 7 நவம்பர் 2023 (07:51 IST)

அயோத்தி ராமர் கோவில் செல்ல இலவசர் ரயில்: அண்ணாமலை அதிரடி அறிவிப்பு..!

அயோத்தியில் ராமர் கோவில் திறந்த பிறகு தமிழக மக்கள் இலவசமாக ரயிலில் அயோத்தி சென்று ராமரை தரிசித்து வரலாம் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 
 
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் அடுத்த ஆண்டு ஜனவரி 22ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் கும்பாபிஷேகம் முடிந்த பிறகு அடுத்த 60 நாட்களுக்கு தமிழக மக்கள் இலவசமாக அயோத்திக்கு சென்று ராமர் கோவிலை காணலாம் என்றும் அதற்கான முழு செலவையும் தமிழக பாஜக ஏற்றுக்கொள்ளும் என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 
 
என் மண் என் மக்கள் பயணத்தின் போது அண்ணாமலை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ள நிலையில் தமிழக மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  இலவசமாக தமிழகத்திலிருந்து எத்தனை பேர் ரயிலில் சென்றாலும் அதற்கான முழு செலவை பாஜக ஏற்றுக்கொள்ளும் என்ற அண்ணாமலையின் அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva