தொடர்புடைய செய்திகள்
- ஹாக்கிப் போட்டி - நியூசிலாந்தை வீழ்த்திய இந்திய அணி
- இங்கிலாந்து வீரர்களுக்கு குல்தீப் பெரும் தலைவலியாக இருப்பார்: சச்சின்
- ஆதார் இருந்தால் இந்தியராகி விட முடியுமா? சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி
- சிறையை விட்டு வெளியே செல்ல மாட்டேன் - நவாஸ் ஷெரீப் மகள் மரியம்
- பெண்களுக்கு பாதுகாப்பில்லை; சென்னை வர மறுத்த சுவிட்சர்லாந்து வீராங்கனை
கார்கில் விஜய் திவாஸ்
ஜூலை 26 1999ஆம் ஆண்டு இந்திய ராணுவம் ஜம்மு-காஷ்மிர் மாநிலத்தில் உள்ள கார்கில் மாவட்டத்தை பாகிஸ்தான் ராணுவம் பிடியில் இருந்து கைப்பற்றியது. இந்த தினத்தை வருடாவருடம் கார்கில் விஜய் திவாஸ் என்ற பெயரில் இந்தியாவில் கொண்டாடி வருகின்றனர்.
கார்கில் போரில் மறைந்த ராணுவ வீரர்களின் நினைவாக ஜூலை 26ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இந்தியா - பாகிஸ்தாஸ் இடையே நீண்ட காலமாக ஜம்மு - காஷ்மீரை யார் கைப்பற்றுவது என்பது தொடர்பாக எல்லை பிரச்சனை இருந்து வருகிறது.
அடிக்கடி இருநாட்டு ராணுவத்தினர் இடையே தாக்குதலும் நடைபெற்று வருகிறது. அண்மையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி இந்திய எல்லைக்குள் தாக்குதல் நடத்தியை அடுத்து இந்திய ராணுவம் சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
இந்தியா - பாகிஸ்தான் எல்லை பிரச்சனை வரலாற்றில் கார்கில் போர் மிக முக்கியமான இடத்தை பிடித்துள்ளது. அப்போது பாகிஸ்தான் ராணுவ தளபதியாக இருந்த முஷரப் பிரதமருக்கு தெரியாமல் இந்திய எல்லைக்குள் தாக்குதல் நடத்தினார்.
இந்த தாக்குதல் கார்கில் போரை தொடக்கத்திற்கு காரணமாய் அமைந்தது. கார்கில் போரில் இந்திய ராணுவ வீரர்கள் பலரும் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
