ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 22 ஜூலை 2018 (19:20 IST)

இங்கிலாந்து வீரர்களுக்கு குல்தீப் பெரும் தலைவலியாக இருப்பார்: சச்சின்

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் குல்தீப் யாதவின் சுழல் பந்துவீச்சு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சச்சின் தெரிவித்துள்ளார். 

 
இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. டி20 மற்றும் ஒருநாள் போட்டி தொடர்கள் முடிவடைந்த நிலையில் வரும் ஆகஸ்டு மாதம் 1ஆம் தேதி தொடங்குகிறது.
 
முதல் மூன்று டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதில் ரோகித் சர்மா இடம்பெறாதது அவரது ரசிகர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
 
குல்தீப் யாதவ் டெஸ்ட் தொடருக்கான அணியில் இடம்பெற்றுள்ளார். இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் கூறியதாவது:-
 
ஒரு நாள் கிரிக்கெட்டில் குல்தீப் யாதவின் சுழற்பந்து வீச்சை இங்கிலாந்தின் ஜோ ரூட் திறம்பட கையாண்டார். அவரது மணிக்கட்டு சுழற்சியை துல்லியமாக கணித்து அதற்கு ஏற்ப விளையாடினார். அவரை போல் மற்ற இங்கிலாந்து பேட்ஸ்மேன்களால் குல்தீப்பின் சுழலை சமாளிக்க முடியும் என்று நினைக்கவில்லை. 
 
பெரும்பாலான வீரர்கள் நிச்சயம் தடுமாறுவார்கள். ஆடுகளம் வெயிலால் நன்கு காயும் போது குல்தீப் யாதவால் தாக்கத்தை ஏற்படுத்த முடியும். ஆடுகளம் பேட்டிங்குக்கு ஏதுவாக உலர்ந்து காணப்பட்டால் இந்தியா வெற்றி பெற நல்ல வாய்ப்பு உள்ளது.