வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 3 நவம்பர் 2022 (16:15 IST)

பாஜகவில் இணைந்த பிரபல நடிகர்.. கர்நாடக அரசியலில் பரபரப்பு!

BJP
பிரபல கன்னட நடிகர் உள்பட 3 பேர் பாஜகவில் இணைந்துள்ளது கர்நாடக மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
கன்னட திரையுலகில் பிரபல நடிகராக இருப்பவர் சசிகுமார். இவர் இன்று தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்டார். அதேபோல் ஓய்வு பெற்ற டாக்டர் அனில் குமார் என்பவரும் பாஜகவில் இணைந்தார். மேலும்  முன்னாள் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த ஒருவரும் பாஜகவில் இணைந்து உள்ளதாக கூறப்படுகிறது 
 
கர்நாடக மாநிலத்தில் இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் வரவிருக்கும் நிலையில் மூன்று பிரபலங்கள் திடீரென பாஜகவில் இணைந்து உள்ளது எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது 
 
கன்னட நடிகர் சசிகுமார் இதற்கு முன்னாள் காங்கிரஸ் கட்சியில் இருந்தார் என்பதும் இரண்டு முறை அவர் தேர்தலில் போட்டியிட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது பாஜகவில் இணைந்துள்ள நிலையில் அவருக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
Edited by Mahendran