வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 1 நவம்பர் 2022 (18:09 IST)

பிரதமர் மோடியைப் புகழ்ந்த காங்கிரஸ் முதல்வர் !

Ashok Gelot
பிரதமர் மோடி வெளி நாடுகளுக்குச் செல்லும் போது அவருக்கு சிறந்த மரியாதை  அளிக்கப்படுவதாக காங்கிரஸ் முதல்வர் அசோக் கெலாட் கூறியுள்ளார்.
 

இந்திய அரசியலில் சுதந்திரத்திற்குப் பின்,  காங்கிரஸ் கட்சிக்கும் பாஜக கட்சிக்கும் தான் பொதுத்தேர்தலில் பலத்த போட்டி ஏற்பட்டு வருகிறது.

மோடி பிரதமராகப் பதவியேற்றது முதல் பாஜக கட்சி அடுத்தடுத்த நடந்த சட்டசபைத் தேர்தல்களிலும்  பெருமளவு வெற்றி பெற்று, காங்கிரஸ் கட்சி தொடர்ச்சியாக வெற்றி பெற்ற மாநிலங்களில் தற்போது ஆட்சி செய்து வருகிறது.

தற்போது,  இந்தியாவில் காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் 2 தான்! ஆனால், பாஜக 123 மா நிலங்களில் ஆட்சி செய்து வருகிறது.

சமீபத்தில்,காங்கிரஸ் தலைவராக கார்க்கே தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் அக்கட்சி மீண்டும் எழுச்சி பெரும் என கூறப்படுகிறது.

இந்த நிலையில், ராஜஸ்தானில் கடந்த 1913 ஆம் ஆண்டு  நடந்த மங்கார் படுகொலையை  நினைவுகூறும் விதமாக மங்கார் தம் கி கவுரவ்  நிகழ்ச்சி பன்ஸ்வாராவில் நடந்தது. இதில், அம்மா நில முதல்வ அசோக் கெலாட் பிரதமர் மோடி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

இதில்,பேசிய முதல்வர் அசோக் கெலாட், ‘’ காந்தி தேசத்தில் பிரதமராக உள்ள பிரதமர் மோடிக்கு,  வெளி நாடுகளுக்கு செல்லும்போது சிறந்த மரியாதை அளிக்கப்படுகிறது.இங்கிருந்து ஒரு பிரதமர் வருவதை அவர்கள் பெருமையாக உணர்கின்றனர்’’ என்று புகழ்ந்துள்ளார்.

இது காங்கிரஸ் கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Sinoj