தொடர்புடைய செய்திகள்
- டெல்லியை வதைக்கும் குளிர்; டயர்களில் படுக்கை! – மாணவிக்கு குவியும் பாராட்டுகள்!
- பாஸ்டேக் கட்டாயம்; கால அவகாசம் நீட்டிப்பு! – வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி!
- பேஸ்புக். இன்ஸ்டாவில் போட்டோ எடுத்து மார்பிங்! – பணம் கேட்டு மிரட்டும் சைபர் ஆசாமி!
- கொரோனா தடுப்பூசி வாங்க நீங்கதான் உதவணும்! – இந்தியாவை நாடிய நேபாளம்!
- உருமாற்ற கொரோனாவையும் இது கட்டுப்படுத்தும்?! – கோவெக்சினுக்கு அனுமதி கோரும் நிறுவனம்!
ஜியோ to மற்ற நெட்வொர்க்குகளுக்கு இனிமேல் இலவசம் – அறிவிப்புக்குப் பின்னுள்ள காரணம்!
ஜியோ தனது நெட்வொர்க்கில் இருந்து மற்ற நெட்வொர்க்குகளுக்கு அழைக்க நிமிடத்துக்கு 6 பைசா வசூலித்து வந்தது.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த ஒரு மாத காலமாக பஞ்சாப், ஹரியானா விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லி மட்டுமல்லாது பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் கார்ப்பரேட் நிறுவனங்களின் வளர்ச்சிக்காகவே அரசு இதுபோன்ற திட்டங்களை ஏற்படுத்துவதாக விவசாயிகள் இடையே பேசிக் கொள்ளப்படுகிறது. இதனால் விவசாயிகள் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சொந்தமான கடைகள், பொருட்களை கண்டால் துவம்சம் செய்து விடுகின்றனர். இதனால் மக்கள் மத்தியில் ஜியோவுக்கு எதிரான மனநிலையே உள்ளது.
இதனால் ஜியோ இப்போது வாடிக்கையாளர்களை சமாதானப்படுத்தும் விதமாக தங்கள் நெட்வொர்க்கில் இருந்து மற்ற நெட்வொர்க்குகளுக்கு அழைக்க வசூலித்து வந்த 6 பைசா கட்டணத்தை ரத்து செய்து இலவசமாக அழைக்கலாம் என அறிவித்துள்ளது.
