தொடர்புடைய செய்திகள்
- புதிய கொரோனா தொற்றால் இந்தியாவுக்கு ஆபத்து: மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை!
- இன்றைய உலக கொரோனா பாதிப்பு மற்றும் பலி விபரங்கள்!
- தமிழகத்தில் இன்று 953 பேருக்கு கொரோனா உறுதி !17 பேர் பலி
- ’’மாலை 6 மணிமுதல் காலை 6 மணி வரை முழு ஊரடங்கு’’? வரவுள்ளதாக தகவல்
- ஆஸ்திரேலியா சென்ற ரோஹித் சர்மாவை வரவேற்ற இந்திய அணியினர்: வைரல் வீடியோ
கொரோனா தடுப்பூசி வாங்க நீங்கதான் உதவணும்! – இந்தியாவை நாடிய நேபாளம்!
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் அதற்கான தடுப்பூசியை வாங்க நேபாளம் இந்தியாவின் உதவியை நாடி உள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கடந்த ஒரு ஆண்டு காலமாக பல கோடி மக்களிடம் பரவியுள்ள நிலையில், பல கோடி மக்கள் உயிரிழந்தும் உள்ளனர். இந்நிலையில் இந்தியாவின் அண்டை நாடான நேபாளமும் கொரோனாவால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்ததும் நேபாளத்தின் தேவையை பூர்த்தி செய்ய உதவுவதாக இந்தியா முன்னதாக தெரிவித்திருந்தது.
இந்நிலையில் நேபாளத்தின் மக்கள் தொகையில் 20 சதவீதம் மக்களுக்கான தடுப்பூசி தேவையை பூர்த்தி செய்ய நேபாளம் வேண்டுகோள் விடுத்துள்ளது. பல்வேறு நாடுகளின் 15 தடுப்பூசிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அந்த தடுப்பூசிகளை இந்தியா மூலமாக விரைவாக பெறவும், அதற்கு பணம் செலுத்தவும் நேபாளம் தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
