வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 26 மே 2019 (17:49 IST)

ஆட்சிக்கு வந்ததுமே சந்திரபாபு நாயுடுவுக்கு செக் வைக்கும் ஜெகன்மீகன் ரெட்டி

நடந்து முடிந்த ஆந்திர பிரதேசத்தின் சட்டசபை தேர்தலில் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன்மீகன் ரெட்டி அதிக தொகுதிகளில் வெற்றிபெற்று ஆட்சியை பிடித்துள்ளார்.

இன்று பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து செய்திகளை பகிர்ந்து கொண்ட ஜெகன்மோகன் ரெட்டி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் “எனக்கு சந்திரபாபு நாயுடுவோடு எந்த தனிப்பட்ட பிரச்சினையும் கிடையாது. நான் மக்களுக்கு உறுதி அளிக்கிறேன். எனது பணி மக்களுக்கான பணி. எனவே எனது அரசு புரட்சி நிறைந்த அரசாக இருக்கும்.

இன்றுதான் பிரதமரை முதல்முறையாக சந்தித்தேன். இந்த 5 வருடங்களில் அடிக்கடி அவரை சந்திப்பேன். ஒவ்வொரு முறை சந்திக்கும்போதும் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவது பற்றி வலியுறுத்திக்கொண்டே இருப்பேன்.

சுமார் 2.58 லட்சம் கடனில் மூழ்கியுள்ள ஆந்திராவுக்கு நிதி உதவி செய்யும்படி பிரதமரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளேன். மேலும் சந்திரபாபு நாயுடு காலத்தில் தொடங்கப்படாமல் மற்றும் தொடங்கி பாதியில் விடப்பட்ட திட்டங்களை முழுமையாக நிறைவேற்றுவேன். அதில் ஊழல்கள் ஏதேனும் நடந்திருப்பது தெரிய வந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பேன்” என கூறினார்.

மறைமுகமாக சந்திரபாபு நாயுடுவை எச்சரிக்கும் தோனியில் ஜெகன்மோகன் ரெட்டி பேசியிருப்பது தெலுங்கு தேசம் கட்சியினருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.