மகளுக்கு பாலியல் மிரட்டல் – மோடியை விளாசிய இயக்குனர்

anurag kashyup
Last Modified சனி, 25 மே 2019 (20:08 IST)
இந்தி திரைப்பட உலகில் தனக்கென தனி முத்திரை பதித்தவர் இயக்குனர் அனுராக் காஷ்யப். தேவ் டி, கேங்ஸ் ஆப் வஸேபூர் போன்ற திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். தமிழில் ‘இமைக்கா நொடிகள்’ படத்தின் மூலம் வில்லனாக அறிமுகம் ஆனார்.

மோடியின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்து ட்விட்டரில் செய்தி பகிர்ந்த அனுராக் “ டியர் மோடி சார். உங்களுடைய வெற்றிக்கு மிகப்பெரிய வாழ்த்துக்கள். என் மகளை பாலியல் ரீதியாக மிரட்டி உங்கள் வெற்றியை கொண்டாடும் உங்கள் தொண்டர்களை நான் எப்படி கையாள்வது என்பதை நீங்கள் சொல்ல வேண்டும்” என்று கூறியுள்ளார். கூடவே அவரது பெண்ணுக்கு இன்ஸ்டாகிராமில் வந்த பாலியல் மிரட்டல் பதிவையும் அதில் இணைத்து ட்வீட் போட்டுள்ளார். கமெண்ட் போட்டவரின் பெயரில் சௌகிதார் என பெயரிடப்பட்டிருப்பதால் அவரை மோடியோடு ஒப்பிட்டு பேசக்கூடாது என்று பலரும் கண்டன குரல்கள் எழுப்பினாலும், அனுராகின் ரசிகர்கள் அவரை காவல் நிலையத்தில் புகார் அளிக்க சொல்லி வருகின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :