தொடர்ந்து நான்கு நிலநடுக்கங்கங்கள்: அதிர்ந்தது ஜம்மு காஷ்மீர்!
ஜம்மு காஷ்மீரில் தொடர்ந்து நான்கு நிலநடுக்கங்கள் ஏற்பட்டதால் மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் பகுதிகளில் நேற்று இரவு 10 மணியிலிருந்து 12 மணிக்குள் தொடர்ந்து நான்கு நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. முதலில் 10.42 மணியளவில் 4.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. அதை தொடர்ந்து சில நிமிடங்களில் 5.5 ரிக்டர் அளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனால் மக்கள் அதிர்ச்சியடைந்த நிலையில் மீண்டும் இரு நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து அந்தமான் தீவு பகுதிகளிலும் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. ஒருநாள் இரவுக்குள் தொடர்ந்து எழுந்த நிலநடுக்கங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.