வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Updated : திங்கள், 30 டிசம்பர் 2019 (16:48 IST)

500 விமானங்கள் தாமதம்!: டெல்லியை சூழ்ந்த பனிமூட்டம்!

டெல்லியில் அதீத பனிப் பொழிவால் விமானங்கள் தரையிறங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. பனிப்பொழிவு அதிகமாக உள்ளதால் சில விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு டெல்லி கடுமையான பனிப்பொழிவை சந்தித்து வருகிறது. அதீத பனிப்பொழிவால் முற்பகல் வரையிலும் அதிகாலை நேரம் போல சூரிய ஒளியின்றி நகரம் காணப்பட்டுள்ளது.

பனிப்பொழிவு காரணமாக 500 விமானங்கள் தாமதமாகியுள்ளன. 5 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. சில விமானங்கள் பக்கத்து நகரங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன. கடும் பனியால் சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளார்கள்.

இன்று டெல்லியில் 2.6 டிகிரி வெப்பநிலை பதிவாகியுள்ளதாக கூறப்படும் நிலையில், இந்த வெப்பநிலை குளிர் பிரதேசமான சிம்லாவை விட குறைவு என கூறப்படுகிறது.