1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 30 டிசம்பர் 2019 (12:33 IST)

வேகமாக சென்ற கார்.. வெளியே விழுந்த குழந்தை! – பதற செய்யும் வீடியோ!

கேரளாவில் அதிவேகமாக சென்ற கார் ஒன்றிலிருந்து குழந்தை வெளியே விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் உள்ள மலப்புரம் – கொட்டக்கால் சாலையில் கார் ஒன்று அதிவேகமாக சென்றுள்ளது. ஒரு வளைவில் கார் வேகமாக திரும்பியது. அப்போது காரினுள் இருந்த குழந்தை பின்பக்க கதவை திறந்துவிடவே தவறி சாலையில் விழுந்தது. பின்னால் வந்து கொண்டிருந்த கார் குழந்தை விழுவதை கண்டு உடனடியாக பிரேக் போட்டு நின்றது. இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

உடனடியாக காரை நிறுத்திவிட்டு இறங்கி வந்த இளைஞர் குழந்தையை பத்திரமாக தூக்கி சென்றார். இந்த விபத்து நடந்து சில வாரங்கள் ஆன நிலையில் தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.