1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. jammu kashmir bus accident 33 dead

300 அடி பள்ளத்தில் விழுந்த பேருந்து.. 33 பேர் பரிதாப பலி..!

300 அடி பள்ளம்
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 300 அடி பள்ளத்தில் பேருந்து விழுந்து விபத்துக்குள்ளான  நிலையில் அதில் பயணம் செய்த 33 பேர் பரிதாபமாக பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கிஷத்வார் என்ற பகுதியில் இருந்து ஜம்முவிற்கு ஒரு பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து தோடா என்ற பகுதியில் சென்ற போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 33 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் ஒரு சிலர் காயமடைந்துள்ள நிலையில் அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும்  இடுப்பாடுகளுக்குள் இன்னும் சிலர் சிக்கி இருப்பதாக கூறப்படும் நிலையில் அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக ஜம்மு காஷ்மீர் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

Edited by Siva
அடுத்த கட்டுரையில்
தலைமைச் செயலாளரை உடனடியாக நீக்க டெல்லி முதல்வர் பரிந்துரை: பரபரப்பு தகவல்..!